Tag: வெற்றி
-
கையில் ஒளிந்த சீட்டு, இதயங்களை உடைக்கும் ஒளிர்வு, கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு, வஞ்சகனின் வெள்ளி நாவு, துறவியின் காலைப் பிரார்த்தனை, நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம், தாயின் கடுமையான அன்பு – இவ்வனைத்திலும் இருப்பவன் நானே! சிறப்பு என்பது என் சாயல் – தங்கத்தில் எழுதப்பட்டாலும் நிழலில் செதுக்கப்பட்டாலும் கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்— ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம் வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் –…
-
(அனுபவப்பகிரல் – அரசியல்) நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு பார்வர்டு வந்தது. “வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் போன்று கவலையுறுதலும் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் போன்று குதுகலிப்பதும் என விசித்திரமான முடிவைத் தந்துள்ளது இந்த தேர்தல்” அப்போது நான் நம்பவில்லை! பாஜக தானே ஆளப்போகிறது பிறகென்ன அதன் ஆதரவாளர்களுக்கு துக்கம்? கூட்டாட்சி என்ன புதிதா? அடல் பிஹாரி வாஜ்பாயி ஒரு கூட்டாட்சியைத் தானே தலைமை தாங்கினார்? ஆனால் இது அத்தனை நேரான விஷயமில்லை ; பல நுணுக்கங்கள் பொதிந்தது என்பது…
-
திரு. கார்த்திக் சுப்புராஜ் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கான கதைக்கருவை யோசித்து யோசித்து எதுவும் தோன்றாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓர் இயக்குனர் என்பதை அவரால் மறக்க முடியவில்லை. ஏதாவது படம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பாகுபலி போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பொறி தட்டியது. தானியக்கிய ஒரு நல்ல படத்தின் ப்ரான்சைஸ் அல்லது சீக்வல்தான் எடுக்கப்போகும் அடுத்த படம் என்று முடிவெடுத்தார்.…
-
நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது. ———————————————————— ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்இன்னும் மழையாய்ப் பொழிந்துமண்ணை நெகிழ வைத்துஇறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,“எமது கரங்களாலேயேஎமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே” யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்தயாகூபின் கண்ணீர் நதிகிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது. யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்ஒழுக்கத்தின் முத்திரைஆழியூழி காலம்வரைவல்லிருளை வெல்லுமொளியாகநின்றிலங்கிக் கொண்டிருக்கும். ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தனசுலைமானின் புன்னகையை. முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமைகொணர்ந்தது,கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை. சிற்றெரும்புகள்…
-
இந்தியா எனக்கு என்ன? – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன்– தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான…
-
சிறப்புப் பதிவு : நட்பாஸ் திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு, சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக் குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு. நட்பாஸ் நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு…
-
வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும். உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை…