• மிட்டாய்க்காரன்

    ராகவனை முதன்முதலாக துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவன் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனை சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான் என்று வர்ணித்தனர். இவற்றுக்கெல்லாம் மேலாக, துபாய்க்கு வந்து காப்பீட்டுத் தரகு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதம் முடிவதற்குள் அவன் செய்து வந்த வேலையை இழந்தான் என்று வம்பு பேசினர்.  அவனைச் சந்தித்த முதல்…