Tag: குறிப்பு
-
சிறப்புப் பதிவு : நட்பாஸ் திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு, சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக் குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு. நட்பாஸ் நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு…
-
முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார். பழைய வருடத்தை எரித்தல் வினாடிகளில் கடிதங்கள் தம்மைத்தாமே விழுங்கிக் கொண்டன ஒளிபுகும் காகிதங்களில் எழுதி தாழ்ப்பாளில் நண்பர்கள் தொங்கவிட்ட குறிப்புகள் விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தத்துடன் வதங்கி காற்றுடன் மணம் புரிந்து கொண்டன – வருடத்தின் பெரும் பகுதிகள் எளிதில் எரியக் கூடியவை – காய்கறிகளின் பட்டியல், பாதிக் கவிதைகள், ஆரஞ்சு நிறத்தில் சுழலும்…