Author: Ganesh Venkatraman
-
காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட,…
-
கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி. காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத்…
-
நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ். யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால்…
-
ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும்…
-
குளிரூட்டப்பட்ட காருக்குள் மேற்கத்திய இசையில் லயித்து மதுவருந்தியபடி, பெண்ணொருத்தியின் அங்கங்களை, சிணுங்கல்களை கற்பனையில் ஏற்றிக் கொண்டு கண் மூடிப் பயணம் செய்கிறான். உமது திருச்சட்டத்தில் உள்ள அற்புதங்களை நான் காண என் கண்களைத் திற. – என்கிறது ஒரு விவிலிய வசனம். உடலின் ஒளியாகிய கண் மூடிக்கிடக்கும்போது எதைக் காணவியலும்? ஓட்டைக்கண்ணைத் திறந்து ஜன்னல் வழிப் பார்க்கிறபோது அவன் காணும் காட்சி அவனுள் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. ஜன்னல் வழி அவன் பார்க்கும் முதியவனின் முகம் அவனுடைய…
-
உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது. ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.” வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை…
-
கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது…
-
கொட்டும் பனிப்பொழிவில் புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்அவனாகத்தான் இருக்க வேண்டும்அவன் எப்படி இங்கே?அவன் மாதிரிதான் தெரிகிறதுஅங்கே இரவுஅவன் கனவில் பனி பொழிகிறதுபுள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்திஅவள் எப்படி அங்கே?அவள் மாதிரிதான் தெரிகிறதுவிதிர்த்து எழுந்திருக்கிறான்ஆடைவிலகிய தொடையிலிருந்துதனது காலை மெல்ல எடுக்கிறான்சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்அவனுடைய கனவு முடிந்துவிட்டதுஅவளது பகல் முடியபல மணி நேரம் இருக்கிறது அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்அவன் மாதிரி இருந்த அவன்அவனாக இருந்திருந்தால்தாண்டிச் சென்றிருக்கமாட்டான்அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்கண்களுக்குள் பொழிகிறது பனிஎதுவும் நடக்காததைப் போல அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்அவள் மாதிரி இருந்த…
-
சீர்மை பதிப்பகம் விலை : ரூ 100 இணைய வழி ஆர்டர் செய்ய – https://www.commonfolks.in/books/d/iraithottam
-
ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சிந்தனைகளையும் ஆளுமைகளைப்பற்றியும் தினம் ஓரிரு குறிப்புகளாக ஃபேஸ் புக்கில் பதிந்தேன். அதைத் தொகுத்து நண்பர் Uvais Ahamed அவர்களுக்கு சில மாதங்கள் முன் அனுப்பியிருந்தேன். இரு வாரங்கள் முன் என்னைத் தொடர்பு கொண்டு தொகுப்பு நூல் வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் செய்தியைத் தெரிவித்து ஆச்சரியத்திலாழ்த்தினார். “இறைத்தோட்டம்” நூலை சென்னை புத்தக சந்தையில் வாங்கலாம். சீர்மை பதிப்பக வெளியீடு. — கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில்…
-
12th Fail படத்தின் ஆரம்ப பகுதிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. Under Dog பற்றிய கதை என்று எண்ண வைக்கிறது. கதையின் முதன்மைப் பாத்திரம் மனோஜ் (விக்ராந்த் மாஸே) தில்லி நகருக்கு வந்த பின்புதான் “இங்கு ஏதோ நடக்கிறது” என்று திரையில் நிகழ்பனவற்றில் பார்வையை ஒட்ட வைக்கிறது. ஏழை ஒருவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதைச் சொல்லும் கதைகள் இதற்குமுன் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. 12th Fail திரைப்படத்தில் என்ன வித்தியாசம்? மனதைக் கசிய வைக்கும் செண்டிமெண்டாலிடி இத்தகைய படங்களின்…
-
Maaz Bin Bilal எழுதிய ஆங்கிலக்கவிதை scroll இணைய தளத்தில் வெளியானது. அவரின் அனுமதியுடன் அடியேனின் தமிழாக்கம். — மஞ்சட்குறிப்புகளுடன் வெள்ளை இதழ்கள் உன் கூந்தலில். நீ குடைமரம் ஆகிவிட்டாய் வா, செண்பகமே மக்களின் வலிமழையிலிருந்து எனக்கு ஒதுங்கிடம் கொடு வா, கிளர்ச்சியற்ற உன் பரவசத்தை என்னுடன் பகிர் — மூலம் – https://amp.scroll.in/article/1061251/champa-a-poem-by-maaz-bin-bilal
-
ஆண்டிறுதிப் பிரதிபலிப்புகள் வாய்மொழியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. உணர்வுகளின் கூட்டமாக அவை எனக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பெயரிட விழைந்தால், "கசப்பு" என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "அவமானம்" அல்லது "அவமரியாதை" என்பது போன்ற வர்ணனைகளுக்குப் பொருந்தி வரும் இவ்வருடத்து சம்பவங்களை அனுபவங்களை என் மனதில் தொடர்ந்து அசைபோட்டு ‘ரீப்ளே’ செய்யும் குணம் சோம்பேறித்தனமான மனநிலையை உருவாக்கி, மலரப்போகும் புதிய ஆண்டு பற்றிய உற்சாகத்தை நீக்குகிறது. அசை போடும் அனுபவங்கள் இப்போது கடந்த காலத்தில் உள்ளன.…
-
இனத்தின் தூய்மைக்குமாறாகமனத்தின் தூய்மையையேநான் விரும்புகிறேன் அஹுரா மஸ்டாவின்அருளை இழப்பதைவிடமனிதர்களின் கோபத்தைஎதிர்கொள்வது மேல்உலகம் முழுவதும்நாம் கண்டுபிடித்துவரும்பண்டைய நாகரிகங்கள்மனத்தின் தூய்மைக்குநேரடி சாட்சி மனம் ஒரு வலைப்பின்னல்திரும்பத்திரும்பஒவ்வொரு வினாடியும்குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்நல்ல எண்ணங்களைஉலவ விடுங்கள்கெட்ட எண்ணங்களின்சுழற்சி இல்லாது போகட்டும் வெறுக்கத்தக்க எண்ணங்களில்எதிர்மறை உணர்ச்சிகளில்மனத் தூய்மை வீணாகியிருந்தால்ஒருபோதும்பண்டைய நாகரிகங்கள்கண்டுபிடிக்கப்பட்டிரா! Copyright ©2008 Farida Bamji Translation in Tamil : by the blogger
-
I had dabbled in lay buddhist practice for a couple of years when I was introduced to Soka Gakkai International, way back in 1997. Like my other pursuits in my life, this practice too fizzled out. Certain friends kept persuading me for a few months. They asked what my reservations were. The obviously honest reasons…
-
திரு. கார்த்திக் சுப்புராஜ் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கான கதைக்கருவை யோசித்து யோசித்து எதுவும் தோன்றாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓர் இயக்குனர் என்பதை அவரால் மறக்க முடியவில்லை. ஏதாவது படம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பாகுபலி போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பொறி தட்டியது. தானியக்கிய ஒரு நல்ல படத்தின் ப்ரான்சைஸ் அல்லது சீக்வல்தான் எடுக்கப்போகும் அடுத்த படம் என்று முடிவெடுத்தார்.…
-
லூதியானா ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கையில் எனக்கு பக்கத்திருக்கையில் இருந்த சர்தார்ஜி மாலை ஆறே கால் மணிக்கு ஜலந்தருக்குக் கிளம்பும் ரயிலுக்காக முட்டியை கைகளால் அழுத்தியவாறே காத்திருந்தார். அவர் சுவாசம் விடும் சத்தம் என் காதை எட்டியது. அவரிடம் பேச ஆரம்பித்தபோது நாற்பது வருடங்களாக ஒரே குழுமத்தில் வேலை பார்க்கிறவர் என்று தெரிய வந்தது. தினமும் ஐலந்தரிலிருந்து வேலைக்காக லூதியானா வந்து போவது சிரமமாக இல்லையா என்று கேட்டேன். “பல முறை வேலையை விடுகிறேன் என்று சொன்னேன். சும்மா…
-
The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன்…
-
ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the…
-
இதற்கு முன் வாசித்த இரு கதைகளைப் போல The Lottery of Babylon சிக்கலான கதையில்லை. அது கூற வருவதை நேரடியாக கையாள்கிறது. அதன் வடிவம் ஒரு தொன்மக்கதை பாணியிலிருக்கிறது. இதனை ஒரு நவீனத் தொன்மம் என்று வகைப்படுத்தலாம். பாபிலோன் எனும் தொன்ம நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவன் சொல்லும் கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது கதை. பாத்திரங்கள், நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. ஒரு பத்திபோல எழுதப்பட்டிருக்கிறது கதை. எதுவும் கிடைக்கும் என்ற ஒழுங்கு நிலவிய பூமியில் எப்போது “சந்தர்ப்பம்”…