Author: Ganesh Venkatraman
-
தைரியத்துடன் செயல் படுங்கள். அரச குடும்பத்தின் செல்வம் இங்கிருந்து மீளாமல் இருக்கட்டும். சாதாரண பெண்கள் தத்தம் வர்க்கத்தில் பிறந்த காதலர்களையே ஈர்ப்பார்கள்; ஆனால் உயர்ந்தோர் தாழ்ந்தோர், எல்லா வர்க்கத்தோரையும் உணர்வால் வளைப்பவரே சிறந்த பெண்கள்” உதயனின் பேச்சைக் கேட்ட பெண்கள் உடன் இளவரசனைக் கவரும் வேலையில் இறங்கினர். ஏதோ பயம் கொண்டவர்கள் போல ஆனந்தம் தரும் சில சைகைகளை புருவங்களினால், பார்வைகளால், கொஞ்சும் வார்த்தைகளினால், புன்னகைகளால், அங்க அசைவுகளால் செய்தார்கள். அரச ஆணையின் விளைவால், இளவரசனின் மென்மைத்…
-
தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப்…
-
”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது. விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா…
-
தீனீ போட்டு கட்டுப்படியாகாமல் விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள் தெருக்களில் திரிந்தன வெள்ளைப் பசு முள்மரங்களை சுவாசம் பிடித்த படி நின்றது மஞ்சள் பசு சாலையோரங்களில் போடப்பட்ட கற்குவியற்களை நாவினால் தொடுகிறது. வெள்ளைப்பசுவின் இளங்கன்று பிளாஸ்டிக் குப்பைகளை ஆர்வத்துடன் நோக்குகிறது மாலை வீடு திரும்பாத பசுக்களைத் தேடி வந்த உரிமையாளன் மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான். இப்போதெலாம் பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை நவநாகரீக கோசாலையில் சுகமாய்க் காலங் கழிக்கின்றன காசு கொடுத்து பசுக்களுக்கு…
-
பட்டுப்போன மரமொன்று பரம சிவன் போல் தெரிந்தது உயரமான மரத்தின் இரு புறத்திலும் இரு கரங்களென பெருங்கிளைகள் மேல் நோக்கி வளைந்த இடப்புற கிளையின் இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும் திரிசூலக் கிளைகள் முன் நோக்கி வளைந்து கண்ணில் படா தண்டத்தின் பிரிவில் தொங்கும் கையென வலப்புறக் கிளை தண்டின் உச்சியில் உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும் கொத்தான கிளைகள் பறவைகள் காலி செய்துவிட்டுப் போன கூடுகள் சிரப்பாகத்திற்குக் கீழ் சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன் சிவனே என்று இருந்த…
-
மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர் கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ. அவன் பாசக்கயிறிட்டு எல்லாரையும் அழித்துவிட்டான். ஒரே ஒருவனைத் தவிர, “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான். “எல்லோரையும் நீ அழித்துவிட இயலாது. ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்” என்றான் எமன். சாகாமல் எஞ்சியிருந்தவனின் கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும் தேடி அலைந்தான் மிருத்யூ எஞ்சிய கருமங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வெறும்…
-
இசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா? இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா? நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா? கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக…
-
நீருக்குள் நிலா பிம்பம் வானில் நிலா அசையாது நின்ற வான்நிலவில் களங்கங்கள் நீர் மேல் தோன்றிய அலைகளில் அளைவுற்றுச் சுத்தமான பிம்பத்தில் கறைகளில்லை நுரைத்து உருவான குமிழிகளில் நூறு நிலாக்கள் வான்நிலவு முகிலாடை பூணவும் பிம்பங்கள் எல்லாமும் ஒரேயடியாய் காணாமல் போயின
-
நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன். மாயை எந்த மனநிலையிலிருப்பினும் ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது, இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும் ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது, எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும் வெகு உயரே…
-
கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய…
-
பிளாஸ்டிக் பூங்கொத்தை சுற்றியவாறு இருக்கும் வண்ணத்துப்பூச்சியும் பிளாஸ்டிக் கண்ணுக்கு எளிதில் புலப்படா இழையால் பூங்கொத்துடன் இணைக்கப் பட்டிருப்பது தெரிய வர உற்று நோக்க வேண்டியிருந்தது.
-
“சொற்ஜாலங்கள் கவிதை இல்லை கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை புதிர்கள் கவிதை இல்லை பிரகடனங்கள் கவிதை இல்லை முழக்கங்கள் கவிதை இல்லை பிரச்சாரங்கள் கவிதை இல்லை வசனங்கள் கவிதை இல்லை” எழுதிய எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு விட்டு வெண் தாளொன்றை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு ”எது கவிதை இல்லை என்பது புரிந்தது; ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?” என்று கேட்ட போது மௌனமே பதிலாய்க் கிடைத்தது. வெண் தாளில் ஒரு கறுப்பு புள்ளி மட்டும்…
-
வித விதமான கவலைகள் படைப்பூக்கமிழக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிய வண்ணம் சங்கிலியை அறுத்தெறிந்து ஓரிரு மகிழ்ச்சியை உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு உவகை தலை தூக்குகையில் அதீத மகிழ்ச்சி அபாயம் தரும் என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன் இனி அபாயமில்லை என்ற நிம்மதியுணர்வை அடையாளம் காணாமல் முழுநேரக் கவலையில் என்னை புதைத்துக் கொண்டேன் +++++ என் கண்ணீர்த்துளிகளை மழைத் துளிகள் மறைத்து விடுதல் சவுகர்யம். நதி உற்பத்தியாகும் இடத்தை மலைகளும் குகைகளும் மறைத்திருக்குமாம்…
-
கணிதத்தில் முற்றொருமைகளில் வரும் அடுக்குகளின் விதிகளை மகளுக்கு கற்றுவிக்கும் முயற்சியில் தோற்று துவண்டு ஓய்ந்தேன். “அடுக்குகளை கூட்டினால் மதிப்பு பெருகும். அடுக்குகளை கழித்தால் மதிப்பு குறையும் அடுக்குகளை வகுக்க மேலடுக்குகளிலிருந்து கீழடுக்குகளை கழிக்க வேண்டும்” ஆறாம் வகுப்பு மாணவிக்கு சமூகவியல் நியதிகள் புரியுமா என்ற கேள்வி கூடவா கணிதப் புத்தக ஆசிரியர்களுக்கு தோன்றியிராது?
-
சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ…
-
சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம். இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை…
-
”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?”…
-
மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர். வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி…
-
இன்னும் இருக்கிறது வாசலில் சில செருப்புகள் மோகத்தைக் கொன்று விடு விலை போகாத எனது 3 கதைகளின் தலைப்புகளை மாற்றி எழுதிப் பார்த்தேன் சில செருப்புகள் இன்னும் வாசலில் இருக்கிறது கொன்றுவிடு மோகத்தை! வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன் வாசலில் கொன்றுவிடு மோகத்தை இன்னும் சில செருப்புகள் இருக்கிறது வேற்றுமை உருபை மாற்றி இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா? என்னுடைய கதையின் தலைப்புகள் தானே! யாரைக் கேட்க வேண்டும்? வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர் மோகத்தை…
-
வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும். உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை…