நடந்து கொண்டேயிருக்கையில்
திடீரென்று
நான் அணிந்திருந்த
என் செருப்புகள்
காணாமல் போயின
அவற்றை தேடி
பல இடங்களிலும்
அலைந்து திரிந்தேன்
வெகு நேரத் தேடலுக்குப் பின்
கிடைத்தன என் செருப்புகள்
அவற்றை என் கையில்
பத்திரமாய் பிடித்துக் கொண்டு
இல்லம் வந்தடைந்தேன்.

தொலைந்த என் செருப்புகள்
Comments
2 responses to “தொலைந்த என் செருப்புகள்”
-
செருப்பு கையில் இருந்ததையும் சுட்டியிருக்கலாம்.
-
வாசகர்கள் யாரும் செருப்புகளை கையில் எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வராமலிருந்தால் சரி 🙂
Leave a reply to ஷா Cancel reply