Tag: நூல்

  • ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the…

  • கறுப்பு-வெள்ளை திரைப்படங்களில் பாத்திரங்கள் கனவு காணத் துவங்கும் போது சுழன்று ஒரு மையப்புள்ளியில் குவியும் வட்டங்களை காட்டுவார்கள். வெளிப்புறத்தில் உருவாகும் வட்டம் பல வட்டங்களை உருவாக்கியவாறு மையப் புள்ளியை நோக்கி நகர்வது போல தோன்றும்; மையப் புள்ளியிலிருந்து புதிதாக ஒரு வட்டம் தோன்றி பல வட்டங்களை வடிவமைத்தவாறே வெளிப்புற வட்டத்தை நோக்கி வளர்வது போலவும் தோன்றும். ஆரம்பம் முடிவு போலவும் முடிவே ஆரம்பம் போலவும் காட்சி தரும் கனவுச் சுழற்சி வட்டத்தின் மையத்தில் ஓர் உள் நோக்கிய…