Tag: கனவு
-
கொட்டும் பனிப்பொழிவில் புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்அவனாகத்தான் இருக்க வேண்டும்அவன் எப்படி இங்கே?அவன் மாதிரிதான் தெரிகிறதுஅங்கே இரவுஅவன் கனவில் பனி பொழிகிறதுபுள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்திஅவள் எப்படி அங்கே?அவள் மாதிரிதான் தெரிகிறதுவிதிர்த்து எழுந்திருக்கிறான்ஆடைவிலகிய தொடையிலிருந்துதனது காலை மெல்ல எடுக்கிறான்சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்அவனுடைய கனவு முடிந்துவிட்டதுஅவளது பகல் முடியபல மணி நேரம் இருக்கிறது அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்அவன் மாதிரி இருந்த அவன்அவனாக இருந்திருந்தால்தாண்டிச் சென்றிருக்கமாட்டான்அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்கண்களுக்குள் பொழிகிறது பனிஎதுவும் நடக்காததைப் போல அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்அவள் மாதிரி இருந்த…
-
The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன்…
-
சோகம் நம்மைஆட்கொள்ளுகையில்நினைவுகளின், கவனத்தின்சின்ன சாகசங்களால்நாம் சில கணங்கட்குகாக்கப்படுகிறோம்:கனியின் சுவை, நீரின் சுவைகனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,லத்தின மொழிப் பாவகையின் சீர்,வீட்டைத் திறக்கும் சிறு சாவி,சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,வரைபடத்தின் நிறங்கள்,சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,மெருகேற்றிய நகம்,நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,நாம் எதிர்பார்க்காத உடல்வலி.எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றனபணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றனதொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.…
-
ஏறத்தாழ இருபத்தியைந்து வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஓர் இடத்திலும் அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ஏக்கத்துடன் அந்த நிலப்பரப்புகளை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் கஷ்மீர் ஒரு வித நினைவேக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஏன் என புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் பழங்கால வரலாறு, தொன்மம், இலக்கியம் என்று அனைத்தையும் தாகத்துடன் படிக்கிறேன். ஒரு சுற்றுலா பிரதேசம் இத்தகைய அதிர்வை தருமா? பழைய தோழி தெருவில் நடந்து செல்ல திண்ணையிலிருந்து ஏக்கத்துடன் அவள் பார்வையில் படாமல் நோக்குவது போல்…
-
ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும் நுழைவதும் வெளிவருவதுமாகவும் இருந்தேன். ஒவ்வொரு கனவிலும் எண்ணற்ற நிகழ்வுகள் எல்லா நிகழ்வுகளிலும் நான்! கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று பின்னர் தான் தெரிந்தது என்னைச் சுற்றிலும் கனவுகள் ஓடியும் பாய்ந்தும் சென்று கொண்டிருக்கின்றன நான் பாய்ந்து செல்லும் கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும் நின்று கொண்டிருக்கிறேன்.
-
சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ…
-
சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில்…