Translations

  • அந்தக் குவியலில் இருந்ததைநீ அறிந்திருக்கவில்லைஅது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்ஒரு பார்வையாளன் கண்டான்அவர்கள் தமது உள்ளங்கைகளின்வெற்றிடத்தை விற்கிறார்கள் பார்வையாளனுக்கு அவர்கள்அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை(அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள் அவர்களின் திரிந்த பார்வையில்அவனின் அந்நிய முகம் கோணுகிறது;தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர். – Rainer Maria Rilke தமிழாக்கம் : அடியேன் Read more

  • சாலையில் தனித்து அலைந்து திரியும்இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!தொழிற்கள் குறித்து கவலையின்றி,அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.சூரியனைப் போல சுதந்திரமாக,இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,சாதாரண எளிமையில்முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது எமிலி டிக்கின்ஸன் Read more

  • இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்… Read more

  • இனத்தின் தூய்மைக்குமாறாகமனத்தின் தூய்மையையேநான் விரும்புகிறேன் அஹுரா மஸ்டாவின்அருளை இழப்பதைவிடமனிதர்களின் கோபத்தைஎதிர்கொள்வது மேல்உலகம் முழுவதும்நாம் கண்டுபிடித்துவரும்பண்டைய நாகரிகங்கள்மனத்தின் தூய்மைக்குநேரடி சாட்சி மனம் ஒரு வலைப்பின்னல்திரும்பத்திரும்பஒவ்வொரு வினாடியும்குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்நல்ல எண்ணங்களைஉலவ விடுங்கள்கெட்ட எண்ணங்களின்சுழற்சி இல்லாது போகட்டும் வெறுக்கத்தக்க எண்ணங்களில்எதிர்மறை உணர்ச்சிகளில்மனத் தூய்மை வீணாகியிருந்தால்ஒருபோதும்பண்டைய நாகரிகங்கள்கண்டுபிடிக்கப்பட்டிரா! Copyright ©2008 Farida Bamji Translation in Tamil : by the blogger Read more

  • ஷிண்டோ

    சோகம் நம்மைஆட்கொள்ளுகையில்நினைவுகளின், கவனத்தின்சின்ன சாகசங்களால்நாம் சில கணங்கட்குகாக்கப்படுகிறோம்:கனியின் சுவை, நீரின் சுவைகனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,லத்தின மொழிப் பாவகையின் சீர்,வீட்டைத் திறக்கும் சிறு சாவி,சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,வரைபடத்தின் நிறங்கள்,சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,மெருகேற்றிய நகம்,நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,நாம் எதிர்பார்க்காத உடல்வலி.எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றனபணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றனதொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.… Read more

  • —- சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த… Read more

  • எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம். இன்றிரவு முழு நிலவு என்பதனால்நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம்பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடேதியானத்தின் ஆற்றல்இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து வாழும் உயிர்களும்இன்றிரவு இங்கு குழுமியுள்ளனஅச்சத்தின்… Read more

  • பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம் இருவருமே அதை நாடவில்லை நிலவிய சூழல்தான் காரணம் பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை வெகுதூரம் துரத்தியிருந்தது – அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை சூழல்தான் காரணம்- ஒரு வேளை அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன் ஊழானது கலைஞனாகத் தோன்றிஇருவரையும் பிரித்திருக்கலாம் ஒருவருக்கு மற்றவர் என்றுமே இருபத்தி நான்கு… Read more

  • ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மாஒரு பிச்சைக்காரனைப்போல்நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்அநாதியாய்சுதந்திரமாய் ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்சதுரங்கப்பலகையில்எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டுவட்டமிடுகின்றன அவை காதல் உனது மையமெனில்உன் விரல்களில் மோதிரமிடப்படும் அந்திப் பூச்சியினுள்ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது ஞானியொருவன்தூய இன்மையின்அழிக்கும் முனையைத் தொடுகிறான் குடிகாரனொருவன்சிறுநீர் கழிப்பதைபாவமன்னிப்பாகக் கருதுகிறான்பிரபுவே, என்னிடமிருந்துஅசுத்தங்களை எடுத்துவிடுங்கள் பிரபு பதிலளித்தார்முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்புரிந்துகொள்உனது சாவி வளைந்திருந்தால்பூட்டு திறக்காது நான் அமைதியானேன்அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான் Read more

  • கி மு 15-3-44

    பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில் தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன் அவற்றைப் பின்தொடர் முன்னகர்ந்து செல்லச்செல்ல மேலதிக விசாரணையும் கவனமும் உள்ளவனாய் நீ இருக்கவேண்டும் இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று உச்சியை அடையும்போதோ அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின் இடத்தை நீ பெறும்போதோ தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று – தெருவில் செல்லும் சமயங்களில் அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம் சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி "இக்கடிதத்தை உடனே… Read more

  • நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள். கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை – சுவர்கள் முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றிஅவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர் இப்போது நானிங்கே விரக்தியில்.வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது; வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை? ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள். மொழியாக்கம்… Read more

  • ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில்  இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான… Read more

  • சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை… Read more

  •   கடலுள் நுழையுமுன்நதிக்கு நடுக்கமேற்படுமெனகூறப்படுகிறது மலைகளின் உச்சிகளிலிருந்துகாடுகளினூடேகிராமங்களினூடேவளைந்து செல்லும் பாதையில்தான் வந்தவழியைபின்திரும்பி நோக்குகிறாள்தன் முன்னம்பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்இதற்குள் நுழைவது என்பதுநிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிரவேறேதுமில்லைஆனால் வேறு வழியில்லை! நதி பின்திரும்பிச் செல்ல முடியாதுயாரும் பின்திரும்பிச் செல்ல முடியாதுஇந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லைகடலுள் நுழையும்இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,கடலாக மாறுவதைப் பற்றியது Read more

  • The Door Keeper

    I saw a doorkeeperwho madethe guests wait at the entrance of a crowded eateryand let them inas the rush became thin.Memories that cannot toleratethe present state and passwithout a pause.Mull over sufferingsof the past.Think about the futureand fret.Can I get a doorkeeperwho would stopthe intrusive memories at the doorstep,check and filter through inside? English Translation by Sri N Srivatsa To… Read more

  • அவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய? அவர்கள்… Read more

  • முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும்… Read more

  • பாண்டவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தின் முடிவில் சிறப்பு மரியாதை அளிக்க கிருஷ்ணனை அழைத்தனர். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சிசுபாலன், கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கோபப்பட்டார்கள், ஆனால் கிருஷ்ணன் கோபப்படவில்லை. அத்தனையையும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும், நூறாவது வசைக்குப் பின், கிருஷ்ணன் கூர்மையான தன் சக்கரத்தை வீசியெறிந்து சிசுபாலன் தலையைத் துண்டித்தான். காரணம், மன்னிப்பின் எல்லையைக் கடந்து விட்டான் சிசுபாலன்.   சார்லி ஹெப்டோ, பகடிகளைத் தாங்கி வரும் பிரஞ்சு மொழி… Read more

  • முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார்.  பழைய வருடத்தை எரித்தல் வினாடிகளில் கடிதங்கள் தம்மைத்தாமே விழுங்கிக் கொண்டன ஒளிபுகும் காகிதங்களில் எழுதி தாழ்ப்பாளில் நண்பர்கள் தொங்கவிட்ட குறிப்புகள் விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தத்துடன் வதங்கி காற்றுடன் மணம் புரிந்து கொண்டன – வருடத்தின் பெரும் பகுதிகள் எளிதில் எரியக் கூடியவை – காய்கறிகளின் பட்டியல், பாதிக் கவிதைகள், ஆரஞ்சு நிறத்தில் சுழலும்… Read more