Author: Ganesh Venkatraman
-
சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன. “The Pursuit of Happyness”…
-
செருப்படி சத்தம் காதைக் கிழித்தது பொறுக்கவியலாமல் சத்தம் நின்றதும் வாசல் வெளியே ஒரு ஜோடி செருப்பு பாதங்கள் எங்கேயென திசையெல்லாம் அலைகையில் செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம் திரும்பவும் அறையில் அடைந்தேன் செருப்படி சத்தம் மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்
-
தலைகளில்லா முண்டங்கள் ஒரு படை அமைத்தன தலைவன் ஒருவனை நியமிக்க தலை தேடும் பணியில் இறங்கின கிடைக்காமல் போன தலைக்கு பதிலாய் தலையின் சித்திரம் வரைந்த பலகையொன்றை எடுத்து ஒரு முண்டத்தின் மேல் ஒட்டி வைத்தவுடன் அதன் உயரம் பன்மடங்காகி எடை பல்கிப் பெருகி அதன் காலடி நிழலின் சிறு பகுதிக்குள் மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.
-
மண்டியிட்டு திட்டில் தலை வைத்து பார்க்கையில் ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம் ஈரமிலா தொண்டையில் சொற்களின் உற்பத்தி முடக்கம். வறண்ட கோடைக்கு நடுவே பெய்த சிறு தூறலின் ஒற்றைத் துளி நாக்கை நனைத்தவுடன் பெருகிய வெள்ளத்தில் கிணறு பொங்கி வழிந்தது.
-
அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும். பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம். கிணற்றோரக்…
-
லங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன். நேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த…
-
27.12.2013 அன்று வலையேற்றிய ”குளம் கோவில் புத்தகம்” என்கிற பதிவு 2.1.2014 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் அச்சேறியிருக்கிறது.
-
கருணையுள்ளம் பருத்தியாகி திருப்திகுணம் நூலாகி தன்னடக்கம் முடிச்சாகி வாய்மை முறுக்காகி அமைந்த பூணுலொன்று உங்களிடம் இருந்தால் அதை எனக்கு அணிவியுங்கள் அது அறுந்து போகாது ; அது அழுக்காகாது ; எரிந்து போகாது ; தொலைந்தும் போகாது ; நானக் சொல்கிறான் அத்தகைய பூணூலை அணிந்தோரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் -குரு நானக் ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம்…
-
சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு…
-
கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப்…
-
(wwww.gandhitoday.in -இல் இன்று வெளியான என் கட்டுரை – http://www.gandhitoday.in/2013/12/blog-post_7.html) குடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்?” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று…
-
கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள்.…
-
மனித உணர்வுகளின் நம்பிக்கைகளின் முன்னர் ஓடி ஒளியும் காலமும் எல்லைகளும்
-
ஜான் லீகார்ரே (John Le Carre) யின் “The Constant Gardener” நாவல் திரைப்படமாக 2005இல் வெளியானது. நாவலின் தலைப்பே திரைப்படத்துக்கும். எட்டாண்டுகள் முன் வெளியான இத்திரைப்படத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தூங்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டே சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நடிகை ரேச்சல் வெய்ஸ் (Rachel Weisz) –க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்று என்று எனக்கு தெரியும். கொஞ்ச நேரம்…
-
ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும் நுழைவதும் வெளிவருவதுமாகவும் இருந்தேன். ஒவ்வொரு கனவிலும் எண்ணற்ற நிகழ்வுகள் எல்லா நிகழ்வுகளிலும் நான்! கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று பின்னர் தான் தெரிந்தது என்னைச் சுற்றிலும் கனவுகள் ஓடியும் பாய்ந்தும் சென்று கொண்டிருக்கின்றன நான் பாய்ந்து செல்லும் கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும் நின்று கொண்டிருக்கிறேன்.
-
தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது. இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக…
-
( My daughter Puja Ganesh is thirteen years old. I have heard her mom telling that Puja is trying to write poems, but never once poems were shown to me. Puja is very inventive of finding odd places to hide her little copy in which she scribbles. This evening, I read the above lines in…
-
இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது. குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக்…
-
மன அமைப்பு ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும். மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு…