Author: Ganesh Venkatraman
-
நிசப்தங்கள் கவனமாகச் செதுக்கப்பட்ட உலகத்தில் நான் வாழ்ந்து வந்தேன். என் கணவர் அஸீஸ், எகிப்து நாட்டின் அமைச்சர், உயர்ந்த பதவியையும் மிகத் தாழ்ந்த உணர்ச்சி வேகத்தையும் கொண்டவர். விலை உயர்ந்த பட்டாடைகளும், குளிர்ந்த கல் சுவர்களும் மட்டுமே என் வாழ்க்கையாக இருந்தன. அப்போதுதான் அவர் அந்தச் சிறுவனை— ஹீப்ரு அடிமையை—வீட்டிற்கு அழைத்து வந்தார். அவன் வளர்வதை நான் பார்த்தேன். அவனது அழகு என்பது வெறும் உடல் சார்ந்தது அல்ல; அது ஒரு அதிர்வு. அது அரண்மனையின் காற்றையே…
-
அன்றைய ‘பட்டுப் பாதை’யில் அமைந்திருந்த நிஷாபூரின் அந்தத் தெரு, ஒரு வணிக வீதியாகக் காட்சியளிக்கவில்லை; அது அச்சமும் தூசியும் சுருண்டோடும் வற்றிய நதிபோல் கிடந்தது. வீசிய காற்றில் இரும்பின் கசப்பு கலந்திருந்தது; அது போர் நெருங்கி வருவதன் எச்சரிக்கை. அத்தரின் அந்தச் சிறு மருந்தகத்தின் கதவு திறந்திருக்க, உள்ளே பரீதுத்தீன் அத்தர் காய்ந்த சாமந்தி மலர்களைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அங்கே நிலவியது நறுமணங்களின் தியானம். சட்டென்று யாரோ உள்ளே நுழைந்தார்கள். அத்தர் நிமிர்ந்து பார்த்தார். எல்லாவற்றையும் மீறி…

-
நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதைத் தொகுப்பின் தலைப்புக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு — “நூர் அலா நூர்”. இந்தத் தலைப்பு எதைச் சொல்ல வருகிறது? திருக்குர்ஆனின் கவித்துவமான ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான் இந்தத் தலைப்பு. இதனை ‘ஆயத் அந்நூர்’ (ஒளியின் வசனம்) என்பார்கள். “அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப்…
-
இப்னு அரபியின் (Ibn ʿArabi) தத்துவ தரிசனத்தில் ‘கண்ணாடி’ (The Mirror) என்பது வெறும் உவமை மட்டுமல்ல; அது பிரபஞ்சத்தின் இருப்பையும், படைப்புக்கும் இறைவனுக்கும் இடையிலான நுட்பமான உறவையும் விளக்கும் ஒரு முழுமையான தரிசனம். அவரது புகழ்பெற்ற ‘ஃபுஸுஸுல் ஹிகம்’ (Fusus al-Hikam) நூலில், ‘ஆதமின் ஞானம்’ (The Wisdom of Adam) என்ற முதல் அத்தியாயத்திலேயே இக்கருத்து மிக ஆழமாக முன்வைக்கப்படுகிறது. 1. மெருகூட்டப்படாத கண்ணாடியும் ‘தஸ்வியா’வும் தொடக்கத்தில் பிரபஞ்சம் என்பது மெருகூட்டப்படாத, மங்கலான ஒரு…
-
குர்ஆன் தன்னை தொடர்ச்சியான ஓர் ஒற்றை தெய்வீக சொற்பொழிவாக முன்வைக்கிறது; இருப்பினும் அதன் மேற்பரப்பில் பல பேசும் நிலைகள் தோன்றுகின்றன. இறைவன் பேசுகிறார், அவரைப் பற்றி பேசப்படுகிறது, அவரிடம் நேரடியாக உரையாடப்படுகிறது; தீர்க்கதரிசிகள், தேவதூதர்கள், ஜின்கள், விசுவாசிகள், நிராகரிப்பவர்கள் ஆகியோர் மேற்கோள் காட்டப்பட்ட குரல்களாக அதற்குள் ஒலிக்கின்றனர். இந்த பன்முகத்தன்மை பேச்சாளரைப் பிளவுபடுத்துவதில்லை; மாறாக, ஒரே தெய்வீக வார்த்தையின் மாறும் உறவுநிலைகளை வெளிப்படுத்துகிறது. வெளிப்பாட்டின் மூலத்தை குர்ஆன் தெளிவாக நிறுவுகிறது: “அது அவருக்கு அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை” (53:4).…
-
அமைதியுடன் அவர்கள் நடக்கிறார்கள். தங்கள் இருப்பையும் தங்கள் நோக்கத்தையும் தவிர வேறு எதையும் அவர்கள் சுமப்பதில்லை. அமெரிக்கா முழுவதும் அவர்கள் பயணம் செய்கிறார்கள். வார்த்தைகள் தேவையில்லாத அமைதியின் வலிமை, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் வெளிப்படுகிறது. அங்கே ஒரு நாய். மகிழ்ச்சியான ஆன்மா—அலோகா; அதன் பொருள் ‘ஒளி’. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இவர்களை அது தேர்ந்தெடுத்தது. ஒருமுறை தேர்ந்தெடுத்த பின், அவர்களை விட்டு விலக அது மறுத்தது. அசைக்க முடியாத விசுவாசத்துடன், இன்று வரை அவர்களோடு…
-
அந்தப் பத்திரிகை மேஜையின் மீது திறந்த நிலையில் கிடக்கிறது. நான் அதன் பக்கத்தைத் திருப்புகிறேன் — பிறகு நிறுத்துகிறேன். ஒரு முழுப் பக்க விளம்பரம் என்னை உற்றுப் பார்க்கிறது. ஒளிரும் முகத்துடனும் அமைதியுடனும் இருக்கும் அனா டி அர்மாஸ், ஒரு வைர நெக்லஸை அணிந்திருக்கிறார். அந்த ஆபரணம் அவரது கழுத்தெலும்பில் வளைந்து, மேம்படுத்தவே தேவையில்லாத அவரது அழகை மேலும் மெருகூட்டுகிறது. ஒரு கணம், நான் எதைப் பார்க்கிறேன் என்று எனக்கே உண்மையாகத் தெரியவில்லை — அந்த நடிகையையா,…
-
எழுத்தாளர் விவேக் ஷான்பாக் அவர்களை ஓர் இணைய இதழுக்காக பேட்டி எடுத்த போது காஷ்மீர எழுத்தாளர் Zahid Rafiq பற்றிய அறிமுகத்தை தந்தார். அந்த எழுத்தாளர் தந்த ஒரு பேட்டி இணையத்தில் வாசிக்க கிடைத்தது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அவர் தந்த பதிலும் – Q You live in Srinagar, Kashmir. Where is the literary heart of Srinagar? A Lost, I guess, but around, diffused, trying to…
-
அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார். —- லட்சியம் என்பது வெறுமைஅது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க…
-
“பாரதியின் காளி” வாசித்து முடித்துவிட்டேன். பாரதிப் பித்தர்களும் பாரதி எதிர்ப்பாளர்களும் எதிர்முனைகளாக இருபுறம் குவிந்து நிற்கிறார்கள். “பாரதி போல் உண்டா” என்ற வழிபாட்டு மன நிலையில் உள்ளோர் ஒரு புறம். வைதிக வர்ணாசிரமக் கருத்துகளின் மறைமுக ஆதரவாளர் என்று வர்ணிப்போர் இன்னொரு புறம். நான் பெரும்பாலும் முந்தைய நிலையில் வளர்ந்தவன். பின்னர் அவருடைய சில போக்குகள் – கனகலிங்கத்துக்கு பூணுல் அணிவித்த நிகழ்வு குறித்த வரலாறு – என்னை சற்று அவரிடமிருந்து விலக வைத்தது. பாரதியின் கவிதைகள்…
-
கையில் ஒளிந்த சீட்டு, இதயங்களை உடைக்கும் ஒளிர்வு, கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு, வஞ்சகனின் வெள்ளி நாவு, துறவியின் காலைப் பிரார்த்தனை, நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம், தாயின் கடுமையான அன்பு – இவ்வனைத்திலும் இருப்பவன் நானே! சிறப்பு என்பது என் சாயல் – தங்கத்தில் எழுதப்பட்டாலும் நிழலில் செதுக்கப்பட்டாலும் கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்— ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம் வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் –…
-
சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன …. சத்தம் அநித்தம் என்றல்பக்கம், பண்ணப் படுத லாலெனல்பக்கத் தன்ம வசனமாகும்… (மணிமேகலை, 29 : 68-71) திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய) கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா? சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை. இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை…
-
ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு”…
-
There was a time when I didn’t know the difference between popular taste and literary merit—nor did I need to. All I knew was that I was hooked. Every week, like clockwork, I would pick up the latest issue of Ananda Vikatan to read the next chapter of a serialised novel that had captured our…
-
கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் முதலாம் சுலோகம் அர்ஜுனனின் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. எல்லோருக்கும் இருக்கும் சந்தேகந்தான் அர்ஜுனன் வழியாக வெளிப்படுகிறது. இருவகையான வழிபாடுகள் உள்ளன. முதல் வழி – உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனின் வழிபாடு. அடுத்த வழி – சுத்தப்பிரம்மத்தின் வழிபாடு. எதை வணங்குவது சிறந்தது? விஷ்ணு என்ற பெயருடன் பாற்கடலில் துயின்று கையில் சங்கு, சக்கரம் ஏந்தியவரும் நீலமேனி உடைத்தவருமானவரைக் கும்பிடுவது சிறந்ததா? அழிக்க முடியாததும் கண்ணில் தென்படாததுமாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடுவதா? எது சரியான…
-
நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன். ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன்…
