தலைகளில்லா
முண்டங்கள்
ஒரு படை அமைத்தன
தலைவன்
ஒருவனை நியமிக்க
தலை தேடும் பணியில் இறங்கின
கிடைக்காமல் போன
தலைக்கு பதிலாய்
தலையின் சித்திரம் வரைந்த
பலகையொன்றை
எடுத்து
ஒரு முண்டத்தின் மேல்
ஒட்டி வைத்தவுடன்
அதன் உயரம் பன்மடங்காகி
எடை பல்கிப் பெருகி
அதன் காலடி நிழலின்
சிறு பகுதிக்குள்
மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.
முண்டங்களின் தலைவன்
Comments
One response to “முண்டங்களின் தலைவன்”
-
தேர்தல் கால அரசியல் நிலைமைக்குப் பொருந்தக்கூடுமோ…
Leave a reply to Shah Cancel reply