நம்பிக்கையின் சிருஷ்டி

முதலில் நம்பிக்கை என்ற சிந்தனை

பின்னர். நம்புங்கள் என்ற சொல்

நம்பினார்கள் பலர்

ஏன் நம்பவேண்டும் என்று ஆய்ந்தனர் சிலர்

ஆய்ந்தவர்களில்

சில பேர் நம்பத்தொடங்கினர்

சில பேர் நம்பத்தேவையில்லை என்றனர்

மற்றவர்கள் இன்னும் ஆய்வைத் தொடர்கின்றனர்

நம்புதலும் நம்பாதிருத்தலும்

நம்புதல் பற்றிய ஆய்வும் என்று

செய்கைகளே மிஞ்சின.

உலகளாவிய பெருமனத்தின்

ஒன்றிணைந்த சிந்தனை, சொல் மற்றும் செய்கைகள்

சிருஷ்டியின் மூலக்கூறுகள் எனில்

நம்பிக்கையின் சிருஷ்டியும் இவ்வாறே நிகழ்ந்திருக்கக்கூடும்.

Comments

4 responses to “நம்பிக்கையின் சிருஷ்டி”

  1. Devaraj Vittalan Avatar

    நம்பிக்கையை பற்றிய அவதானிப்பு கவிதையில் வெளிப்படுகிறது

    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    தேவராஜ் விட்டலன்

    1. hemgan Avatar

      அன்பு தேவராஜ்
      உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      கணேஷ்

  2. Venkat Avatar

    நம்பிக்கை தானே எல்லாம்… நல்ல கவிதை கணேஷ்…..

  3. hemgan Avatar

    நன்றி வெங்கட்

Leave a reply to hemgan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.