வாயிற்காவலன்

கூட்டம் பெருகிவிட்ட

சிற்றுண்டி நிலையத்தில்

வருபவர்களை

வாயிலில் காக்கவைத்து

உள்ளிருக்கும்

கூட்டம் தணிந்த பின்

காத்திருப்போரை

உள்ளே விடும்

வாயிற்காவலனொருவனை பார்த்தேன்.

நிகழ்கால இருப்பை பொறுக்காமல்

நிற்காமல் நகரும் நினைவுகள்.

இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ;

எதிர் காலத்தை எண்ணி

அல்லலுறும்.

உள் புகும் நினைவுகளை

வாயிலில் நிறுத்தி

பரிசோதித்து

வடிகட்டி உள்ளனுப்பும்

காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?

Comments

6 responses to “வாயிற்காவலன்”

  1. hemgan Avatar

    நன்றி முத்துலெட்சுமி. உங்கள் வலைதள முகவரியை தாருங்கள்.

  2. GayathriArun Avatar

    உங்கள் பதிவுகளும் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.
    முழுவதுமாக படிக்க இயலவில்லை.கண்டிப்பாகப் படிக்கிறேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்…
    நேற்றும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    1. hemgan Avatar

      உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  3. முத்துலெட்சுமி Avatar

    என்பெயரை க்ளிக் செய்தாலே அது என் தளத்திற்கு செல்லும்.. 🙂 இருந்தாலும் இது தான் என் வலை முகவரி. ..www.sirumuyarchi.blogspot.in

  4. […] To read the original : https://hemgan.blog/2012/02/23/வாயிற்காவலன்/ […]

Leave a reply to GayathriArun Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.