Tag: விரல்

  • இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா…

  • ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மாஒரு பிச்சைக்காரனைப்போல்நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்அநாதியாய்சுதந்திரமாய் ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்சதுரங்கப்பலகையில்எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டுவட்டமிடுகின்றன அவை காதல் உனது மையமெனில்உன் விரல்களில் மோதிரமிடப்படும் அந்திப் பூச்சியினுள்ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது ஞானியொருவன்தூய இன்மையின்அழிக்கும் முனையைத் தொடுகிறான் குடிகாரனொருவன்சிறுநீர் கழிப்பதைபாவமன்னிப்பாகக் கருதுகிறான்பிரபுவே, என்னிடமிருந்துஅசுத்தங்களை எடுத்துவிடுங்கள் பிரபு பதிலளித்தார்முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்புரிந்துகொள்உனது சாவி வளைந்திருந்தால்பூட்டு திறக்காது நான் அமைதியானேன்அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

  • பழக்கம் எனும் மகாசக்தி பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன். +++++ நட்பு நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து…