Tag: வாசனை
-
சோகம் நம்மைஆட்கொள்ளுகையில்நினைவுகளின், கவனத்தின்சின்ன சாகசங்களால்நாம் சில கணங்கட்குகாக்கப்படுகிறோம்:கனியின் சுவை, நீரின் சுவைகனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,லத்தின மொழிப் பாவகையின் சீர்,வீட்டைத் திறக்கும் சிறு சாவி,சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,வரைபடத்தின் நிறங்கள்,சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,மெருகேற்றிய நகம்,நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,நாம் எதிர்பார்க்காத உடல்வலி.எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றனபணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றனதொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.…
-
இந்தியா எனக்கு என்ன? – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன்– தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான…
-
சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை…
-
தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது. இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக…