Tag: லட்சியம்

  • கையில் ஒளிந்த சீட்டு, இதயங்களை உடைக்கும் ஒளிர்வு, கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு, வஞ்சகனின் வெள்ளி நாவு, துறவியின் காலைப் பிரார்த்தனை, நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம், தாயின் கடுமையான அன்பு – இவ்வனைத்திலும் இருப்பவன் நானே! சிறப்பு என்பது என் சாயல் – தங்கத்தில் எழுதப்பட்டாலும் நிழலில் செதுக்கப்பட்டாலும் கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்— ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம் வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் –…

  • The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன்…

  • பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில் தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன் அவற்றைப் பின்தொடர் முன்னகர்ந்து செல்லச்செல்ல மேலதிக விசாரணையும் கவனமும் உள்ளவனாய் நீ இருக்கவேண்டும் இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று உச்சியை அடையும்போதோ அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின் இடத்தை நீ பெறும்போதோ தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று – தெருவில் செல்லும் சமயங்களில் அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம் சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி "இக்கடிதத்தை உடனே…