Tag: மழை
-
நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க…
-
“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும். ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின்…
-
சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்ஷுக்களின் குழுவொன்று பிக்ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி…
-
உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ; அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ; பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள். “உடற்கழு தனையோ வுயிர்க்கழு…
-
வித விதமான கவலைகள் படைப்பூக்கமிழக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிய வண்ணம் சங்கிலியை அறுத்தெறிந்து ஓரிரு மகிழ்ச்சியை உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு உவகை தலை தூக்குகையில் அதீத மகிழ்ச்சி அபாயம் தரும் என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன் இனி அபாயமில்லை என்ற நிம்மதியுணர்வை அடையாளம் காணாமல் முழுநேரக் கவலையில் என்னை புதைத்துக் கொண்டேன் +++++ என் கண்ணீர்த்துளிகளை மழைத் துளிகள் மறைத்து விடுதல் சவுகர்யம். நதி உற்பத்தியாகும் இடத்தை மலைகளும் குகைகளும் மறைத்திருக்குமாம்…
-
மரம் போலவொரு அழகான கவிதை என் வாழ்நாளில் என்னால் எழுத முடியாது. பசி மிகுந்த மரத்தின் வாய் பூமித் தாயின் வழியும் முலைகளில் பொருத்தப்பட்டிருக்கும். கடவுளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் தன் இலைக் கரங்களை எழுப்பி தொழுகை புரியும். கோடை காலங்களில் வண்ணாத்திக் குருவியின் கூடுகளை தொப்பிகளாக அணிந்து கொள்ளும். மார்பில் பனி பூசிக் கொண்ட மரங்கள் மழையுடன் கூடும் என் போன்ற முட்டாள்களால் கவிதை மட்டுமே கிறுக்க இயலும் கடவுளால் மட்டுமே மரத்தினை படைத்தல்…