Tag: மலை
-
காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட,…
-
கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது…
-
தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.
-
ஏரி ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு ஏரி சலனமற்றிருக்கிறது சில நாட்களுக்கு முன் தயக்கமின்றி உன்னிடமிருந்து காலியான மதுக்கோப்பைகளை விட்டெறிந்திருந்தாய் அதில் மறுக்காமல் பெற்றுக்கொண்டது ஏரி பிறகொரு நாள் நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக் கழுவிச் சாம்பலையும் கரைத்தாய் நேற்றுகூடக் கசந்துபோன நம் உறவினை இகழ்ந்து எச்சில் துப்பினாய் தண்ணீரில் எந்தக் காலமொன்றில்லாமல் எல்லாக் காலங்களிலும் உன் கழிவுகளைக் கொட்டி உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய் இன்று இதில் எதையும் நினைவுறுத்தாது உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய் உன் அசுத்தங்களை அடித்துக்…
-
ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி? அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக…
-
சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன. “The Pursuit of Happyness”…
-
பலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா? சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல. வினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. மலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும். “அது எனக்கு…