Tag: மரம்

  • கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது…

  • போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார்.…

  • கவிதை புத்தகங்களை அதிகம் சேர்ப்பதில்லை. அடிக்கடி படிக்க வைக்கும் அம்சம் இல்லையெனி்ல் எழுதியவை எளிதில் அழுகிப்போகும் உணவாகி விடும். கதைகள் போலில்லாமல் கவிதைகள் அதிர்வைத் தரவில்லையெனில் புத்தக ஷெல்பின் அடித்தட்டில் சென்றுறங்க வேண்டியதுதான். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான Sri N Srivatsa அவர்கள் தாம் மொழிபெயர்த்த “முகமுகமாய்ப் பூத்த மரங்கள்” நூலைத் தந்தபோது மறுக்க முடியவில்லை. தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்று நண்பரிடம் சொன்னேன். கவிதைகளை நேற்றிரவு வாசிக்க ஆரம்பித்த போது என்னுடைய…

  • சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின்…

  • தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசி – திஸ்ஸாரக்கா – போதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக்…

  • சிறு தளிர்கள் உதிர்ந்து விழுந்தன மொட்டுகள் மூச்சுத் திணறி வாடிப்போயின வேர் வழி உருவிலா நஞ்சு பரவி மரம் தள்ளாடிற்று ஒரு மரம் அழித்து தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி அதி விரைவில் எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது கருத்தின் வடிவிலும் கொள்கையின் வடிவிலும் தீவிரம் என்னும் உடையணிந்து வாதம் எனும் மகுடியூதி மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

  • சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்‌ஷுக்களின் குழுவொன்று பிக்‌ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்‌ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்‌ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்‌ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி…

  • மரம் வெட்டும் திருவிழா காலனியில் இன்று இனிப்பு விநியோகம் முன்வாசலில் நின்ற வயதான மரங்கள் வெட்டப்பட்டு கட்டிட பால்கனிகளில் வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ; கலைந்த கூடோன்றுள் கிடந்த பறவை முட்டைகளை வீசியெறிந்து விளையாடி குழந்தைகள் குதூகலிப்பதை மரங்களின் இடத்தடையின்றி நகர்ந்த வாகனங்களின் உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில் பால்கனிக்காரர்கள் கண்டு களித்தார்கள் மரண தினத்தை கொண்டாடும் மரபு மரம் மரணித்த அன்றும் மாறாமல் தொடர்ந்தது ​@ studiothirdeye.com செயல்முறை சிந்தனைப்பாத்திரத்தில்…

  • ஞாபகார்த்த இலை காணாமல் போனது மரத்திலிருந்து விடுபட்ட இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை புத்தகப்பக்கங்களுக்கு நடுவில் சிறைப்படுத்தி வைத்திருந்தாய் புத்தகயாவின் புனித மரத்தின் இலையது என்பதை மறந்து போனாயா?

  • பட்டுப்போன மரமொன்று பரம சிவன் போல் தெரிந்தது உயரமான மரத்தின் இரு புறத்திலும் இரு கரங்களென பெருங்கிளைகள் மேல் நோக்கி வளைந்த இடப்புற கிளையின் இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும் திரிசூலக் கிளைகள் முன் நோக்கி வளைந்து கண்ணில் படா தண்டத்தின் பிரிவில் தொங்கும் கையென வலப்புறக் கிளை தண்டின் உச்சியில் உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும் கொத்தான கிளைகள் பறவைகள் காலி செய்துவிட்டுப் போன கூடுகள் சிரப்பாகத்திற்குக் கீழ் சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன் சிவனே என்று இருந்த…

  • சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ…

  • அக்கரையின்றி திரிபவனின் வேட்கை படரும் கொடி போல வளரும் ; வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல் அவன் அங்கும் இங்குமாக அலைந்து திரிவான். பிசுபிசுப்பு மிக்க அருவெறுப்பான தீவிர நாட்டம் உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய் உன் துயரங்கள் வளரத் தொடங்கும் மாறாக, இவ்வுலகத்திலேயே, அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து நீ விடுபடுவாயானால் தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல உன் துயரங்கள் நீங்கும் இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும்…

  • மரம் போலவொரு அழகான கவிதை என் வாழ்நாளில் என்னால் எழுத முடியாது. பசி மிகுந்த மரத்தின் வாய் பூமித் தாயின் வழியும் முலைகளில் பொருத்தப்பட்டிருக்கும். கடவுளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் தன் இலைக் கரங்களை எழுப்பி தொழுகை புரியும். கோடை காலங்களில் வண்ணாத்திக் குருவியின் கூடுகளை தொப்பிகளாக அணிந்து கொள்ளும். மார்பில் பனி பூசிக் கொண்ட மரங்கள் மழையுடன் கூடும் என் போன்ற முட்டாள்களால் கவிதை மட்டுமே கிறுக்க இயலும் கடவுளால் மட்டுமே மரத்தினை படைத்தல்…

  • முழுதும் மொட்டையடிக்கப்பட்ட ஒற்றைக்குன்று அதன் உச்சியில் ஒரே ஒரு மரம். குன்றின் பின்னிலிருந்து உதித்துக்கொண்டிருந்த சூரியனின் கதிர்களை மறைத்தது உச்சியில் இருந்த ஒற்றை மரம். +++++ மருந்துக்கு ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை. குன்றின் சொறசொறப்பான உடம்பை இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில் கைகள் சிவந்துபோயின. சில இடங்களில் கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய வழுவழுப்பில் கால்கள் வழுக்கினாலும் கரங்கள் சுகம் பெற்றன. சற்றுநேரத்தில் சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து உயர எழுந்து கண்ணைக்கூசவைத்தது. கூசிய கண்களை சுருக்கியபடி ஏறி உச்சியை அடைந்தேன். +++++ சூரியனை…