Tag: மயக்கம்

  • கொட்டும் பனிப்பொழிவில் புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்அவனாகத்தான் இருக்க வேண்டும்அவன் எப்படி இங்கே?அவன் மாதிரிதான் தெரிகிறதுஅங்கே இரவுஅவன் கனவில் பனி பொழிகிறதுபுள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்திஅவள் எப்படி அங்கே?அவள் மாதிரிதான் தெரிகிறதுவிதிர்த்து எழுந்திருக்கிறான்ஆடைவிலகிய தொடையிலிருந்துதனது காலை மெல்ல எடுக்கிறான்சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்அவனுடைய கனவு முடிந்துவிட்டதுஅவளது பகல் முடியபல மணி நேரம் இருக்கிறது அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்அவன் மாதிரி இருந்த அவன்அவனாக இருந்திருந்தால்தாண்டிச் சென்றிருக்கமாட்டான்அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்கண்களுக்குள் பொழிகிறது பனிஎதுவும் நடக்காததைப் போல அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்அவள் மாதிரி இருந்த…

  • சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை…