சாலையில் தனித்து அலைந்து திரியும் இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! தொழிற்கள் குறித்து கவலையின்றி, அவசரங்களைக் கண்டு பயப்படாமல் ! அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான் கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது. சூரியனைப் போல சுதந்திரமாக, இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ, சாதாரண எளிமையில் முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது