Tag: பொழிவு
-
பனி நூறுபனி ஆறு அவள் கூற்று நள்ளிரவில் முதுபனியில்உடல்தளர்ந்த பழுப்புக் கரடிகொல்லைக் கதவைத் தட்டுகிறதுமின் திரையில் தெரிகிறதுஉனக்காக இல்லை, கரடியேகூடத்தில் பரிமாறியிருக்கும்ஸ்ட்ராபெர்ரி பழக்கொத்துகாக்க வைத்தவன் இன்னும் வரவில்லைசிசிடிவி காமிராவருங்காலத்தைக் காட்டுவதில்லைஎப்போதுமேதிறக்கச் சந்தர்ப்பம் தராதஇந்த வாசற்கதவு எதற்காக? (பாடியவர்: ஸ்ரீவள்ளி) பனி நூறுபனி ஏழு தோழி கூற்று முந்தைய நாள் பெய்த பனிப் பொழிவில்குழந்தைகள் ஆடினர்பொம்மை செய்தனர்கை கால் உடலோடுயாரும் பார்க்காதபோதுஅது உயிர்த்திருக்க வேண்டும்இன்று இளம் வெயில்பாதிக் கை காணோம்பாதிக் கால் சரிந்துவிட்டதுஒரு பக்கம் காது இல்லைஅதன் முன்…