Tag: பெயர்

  • போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார்.…

  • ராஜதரங்கிணி நூலில் வரும் கஷ்மீர மன்னர்களின் வரிசையை வாசித்த போது என்னுள் தோன்றிய அதே பெருவியப்பு விஷ்ணு புராணத்தில் வரும் அரசவம்சங்களின் பெயர்களை அவ்வம்சங்களின் அரசர்களின் பெயர்களை வாசிக்கும்போதும் தோன்றியது. ராஜதரங்கிணி போன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் புராணங்கள் எழுதப்படவில்லை என்றாலும் புராணமும் வரலாறும் இணைவதைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது. அசோகரின் பெயரை விஷ்ணு புராணத்தில் வாசித்தபோது அசோகரைத் தொன்ம பாத்திரமாக சித்திரிக்கும் பௌத்த இலக்கியங்கள் ஞாபகத்தில் வந்து சென்றன. புத்தர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் பௌத்த…

  • சோகம் நம்மைஆட்கொள்ளுகையில்நினைவுகளின், கவனத்தின்சின்ன சாகசங்களால்நாம் சில கணங்கட்குகாக்கப்படுகிறோம்:கனியின் சுவை, நீரின் சுவைகனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,லத்தின மொழிப் பாவகையின் சீர்,வீட்டைத் திறக்கும் சிறு சாவி,சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,வரைபடத்தின் நிறங்கள்,சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,மெருகேற்றிய நகம்,நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,நாம் எதிர்பார்க்காத உடல்வலி.எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றனபணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றனதொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.…

  • சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக…

  • தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு…. +++++ தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா? +++++ கல்லறையிலிருந்து எழுந்து வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும் இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும் நடுவழியில் சந்தித்துக் கொண்டன ஒன்றின் ஆவேசமும்…