Tag: பிரபஞ்சம்

  • ருபையாத் அல்லது ருபாயியாத் உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவி ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி – இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்பது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது.  சீர்மை பதிப்பகம் “ரூமியின் ருபாயியாத்” தமிழாக்க நூலை சமீபத்தில்…

  • கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது…

  • ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மாஒரு பிச்சைக்காரனைப்போல்நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்அநாதியாய்சுதந்திரமாய் ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்சதுரங்கப்பலகையில்எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டுவட்டமிடுகின்றன அவை காதல் உனது மையமெனில்உன் விரல்களில் மோதிரமிடப்படும் அந்திப் பூச்சியினுள்ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது ஞானியொருவன்தூய இன்மையின்அழிக்கும் முனையைத் தொடுகிறான் குடிகாரனொருவன்சிறுநீர் கழிப்பதைபாவமன்னிப்பாகக் கருதுகிறான்பிரபுவே, என்னிடமிருந்துஅசுத்தங்களை எடுத்துவிடுங்கள் பிரபு பதிலளித்தார்முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்புரிந்துகொள்உனது சாவி வளைந்திருந்தால்பூட்டு திறக்காது நான் அமைதியானேன்அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

  • மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர் கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ. அவன் பாசக்கயிறிட்டு எல்லாரையும் அழித்துவிட்டான். ஒரே ஒருவனைத் தவிர, “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான். “எல்லோரையும் நீ அழித்துவிட இயலாது. ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்” என்றான் எமன். சாகாமல் எஞ்சியிருந்தவனின் கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும் தேடி அலைந்தான் மிருத்யூ எஞ்சிய கருமங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வெறும்…