Tag: பாரதி
-
“பாரதியின் காளி” வாசித்து முடித்துவிட்டேன். பாரதிப் பித்தர்களும் பாரதி எதிர்ப்பாளர்களும் எதிர்முனைகளாக இருபுறம் குவிந்து நிற்கிறார்கள். “பாரதி போல் உண்டா” என்ற வழிபாட்டு மன நிலையில் உள்ளோர் ஒரு புறம். வைதிக வர்ணாசிரமக் கருத்துகளின் மறைமுக ஆதரவாளர் என்று வர்ணிப்போர் இன்னொரு புறம். நான் பெரும்பாலும் முந்தைய நிலையில் வளர்ந்தவன். பின்னர் அவருடைய சில போக்குகள் – கனகலிங்கத்துக்கு பூணுல் அணிவித்த நிகழ்வு குறித்த வரலாறு – என்னை சற்று அவரிடமிருந்து விலக வைத்தது. பாரதியின் கவிதைகள்…
-
கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப்…
-
இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது. குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக்…
-
போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :- “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு…