Tag: பாம்பு

  • அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார். —- லட்சியம் என்பது வெறுமைஅது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க…

  • வளைந்தோடும் நதியின் கரையில் நீராடும் பார்த்தனின் இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம். வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய் அது பாதத்தை தீண்டிடவும் நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான். ஒளி ஊடுருவும் மாளிகையின் அறையில் விழித்தான் வெளியே நாற்புறமும் மீன்களும் நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன பார்த்தனின் முன் எரிகுண்டம் ; நெய்யிட்டு தீ வளர்த்தான். அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது அருகிருந்த பாம்பின் கண்களில் படர்ந்திருந்த இச்சைத்தீ. கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம் பாம்பு பெண் பாம்புப்பெண் தீச்சடங்கு முடியவும் “இது சாட்சி”…

  • பட்டுப்போன மரமொன்று பரம சிவன் போல் தெரிந்தது உயரமான மரத்தின் இரு புறத்திலும் இரு கரங்களென பெருங்கிளைகள் மேல் நோக்கி வளைந்த இடப்புற கிளையின் இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும் திரிசூலக் கிளைகள் முன் நோக்கி வளைந்து கண்ணில் படா தண்டத்தின் பிரிவில் தொங்கும் கையென வலப்புறக் கிளை தண்டின் உச்சியில் உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும் கொத்தான கிளைகள் பறவைகள் காலி செய்துவிட்டுப் போன கூடுகள் சிரப்பாகத்திற்குக் கீழ் சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன் சிவனே என்று இருந்த…

  • சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில்…

  • நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே! நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது. ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம்,…