Tag: பாடல்
-
நண்பர் நிஷா மன்சூர் வாட்ஸப்பில் ஒரு மின்னூலைப் பகிர்ந்ந்திருந்தார். அவருடைய தந்தை வழி பூட்டனார் எழுதிய ஒரு கவிதை நூல். “நெல் குத்தும் ஞானப்பதம்” என்பது அதன் தலைப்பு. தமிழ் சிற்றிலக்கிய மரபு, தமிழர்களின் வாழ்வியல், இஸ்லாமிய மெய்ஞானம் – மூன்று அம்சங்களும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாக்களை இசைக்கத்தக்க வகையில் இயற்றியுள்ளார் இதன் ஆசிரியர். கவிதைகளின் ஆரம்பத்தில் “இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி” என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் இதை சங்கீதமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை என்கிறார்…
-
நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப்…
-
நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன். மாயை எந்த மனநிலையிலிருப்பினும் ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது, இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும் ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது, எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும் வெகு உயரே…