Tag: பள்ளம்
-
இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்…