Tag: பயம்

  • உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது. ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது :  “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.” வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை…

  • நாம் கவனமாக இருக்கிறோம். மரியாதையாகப் பேசுதல், கடுஞ்சொற்களை பயன்படுத்தாதிருத்தல், எல்லா குறைகளையும் பொறுமையாக செவிமடுத்தல், எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் உரிய  விளக்கங்களை இயன்ற வரை தருதல், உயர்மட்டம் எடுக்கும் முடிவுகளை பூச்சுகள் எதுவும் இல்லாமல் உடனுக்குடன் அறியத்தருதல், விடுப்பு வேண்டுகோள்களை நிராகரிக்காமல் இருத்தல், கான்பரன்ஸ் அறையின் கதவை மூடாமல் சர்வஜாக்கிரதையாக சந்திப்புகளை நிகழ்த்துதல், தப்பித்தவறி கூட சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் கேட்டுவிடாதிருத்தல்..….இதற்கு மேல் என்ன செய்ய….…பிஓஎஸ்எச் கையேட்டின் ஒரு ஷரத்தைக் கூட இதுவரை மீறியதில்லை.  …

  •   கடலுள் நுழையுமுன்நதிக்கு நடுக்கமேற்படுமெனகூறப்படுகிறது மலைகளின் உச்சிகளிலிருந்துகாடுகளினூடேகிராமங்களினூடேவளைந்து செல்லும் பாதையில்தான் வந்தவழியைபின்திரும்பி நோக்குகிறாள்தன் முன்னம்பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்இதற்குள் நுழைவது என்பதுநிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிரவேறேதுமில்லைஆனால் வேறு வழியில்லை! நதி பின்திரும்பிச் செல்ல முடியாதுயாரும் பின்திரும்பிச் செல்ல முடியாதுஇந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லைகடலுள் நுழையும்இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,கடலாக மாறுவதைப் பற்றியது

  • போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :- “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு…