Tag: பசு

  • ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது;…

  • வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின்…

  • தீனீ போட்டு கட்டுப்படியாகாமல் விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள் தெருக்களில் திரிந்தன வெள்ளைப் பசு முள்மரங்களை சுவாசம் பிடித்த படி நின்றது மஞ்சள் பசு சாலையோரங்களில் போடப்பட்ட கற்குவியற்களை நாவினால் தொடுகிறது. வெள்ளைப்பசுவின் இளங்கன்று பிளாஸ்டிக் குப்பைகளை ஆர்வத்துடன் நோக்குகிறது மாலை வீடு திரும்பாத பசுக்களைத் தேடி வந்த உரிமையாளன் மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான். இப்போதெலாம் பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை நவநாகரீக கோசாலையில் சுகமாய்க் காலங் கழிக்கின்றன காசு கொடுத்து பசுக்களுக்கு…