Tag: பசி

  • உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது. ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது :  “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.” வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை…

  • ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது;…