Tag: நீலம்

  • முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம்  நான் “பர்ஃபெக்ட்…

  • Buddhist Logic என்ற இரண்டு புத்தக நூலை இரு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். படிக்காவிட்டாலும் சில புத்தகங்களை நம்முடன் வைத்திருப்பதே ஒரு பெருமிதத்தை கொடுக்கும். ஒவ்வொரு முறையும் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது, சில பத்திகளைப் படிப்பது என்று இந்நூலுடனான தொடர்பை துவக்க (பிரம்ம!) பிரயத்தனம் செய்து வந்தேன். அடர்த்தியான தருக்கவியல் தத்துவங்களை விரிவாகப் பேசும் இந்நூலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. பௌத்த தத்துவவியல் வரலாற்றைப் பேசும் முதல் அத்தியாயம் படிப்பதற்கு எளிதாக இருந்தது. யோகசார பௌத்தத்தின் தத்துவ…

  • வித விதமான கவலைகள் படைப்பூக்கமிழக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிய வண்ணம் சங்கிலியை அறுத்தெறிந்து ஓரிரு மகிழ்ச்சியை உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு உவகை தலை தூக்குகையில் அதீத மகிழ்ச்சி அபாயம் தரும் என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன் இனி அபாயமில்லை என்ற நிம்மதியுணர்வை அடையாளம் காணாமல் முழுநேரக் கவலையில் என்னை புதைத்துக் கொண்டேன்  +++++  என் கண்ணீர்த்துளிகளை மழைத் துளிகள் மறைத்து விடுதல் சவுகர்யம். நதி உற்பத்தியாகும் இடத்தை மலைகளும் குகைகளும் மறைத்திருக்குமாம்…