Tag: நதி

  • நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது. ———————————————————— ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்இன்னும் மழையாய்ப் பொழிந்துமண்ணை நெகிழ வைத்துஇறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,“எமது கரங்களாலேயேஎமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே” யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்தயாகூபின் கண்ணீர் நதிகிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது. யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்ஒழுக்கத்தின் முத்திரைஆழியூழி காலம்வரைவல்லிருளை வெல்லுமொளியாகநின்றிலங்கிக் கொண்டிருக்கும். ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தனசுலைமானின் புன்னகையை. முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமைகொணர்ந்தது,கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை. சிற்றெரும்புகள்…

  • ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக்…

  •   கடலுள் நுழையுமுன்நதிக்கு நடுக்கமேற்படுமெனகூறப்படுகிறது மலைகளின் உச்சிகளிலிருந்துகாடுகளினூடேகிராமங்களினூடேவளைந்து செல்லும் பாதையில்தான் வந்தவழியைபின்திரும்பி நோக்குகிறாள்தன் முன்னம்பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்இதற்குள் நுழைவது என்பதுநிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிரவேறேதுமில்லைஆனால் வேறு வழியில்லை! நதி பின்திரும்பிச் செல்ல முடியாதுயாரும் பின்திரும்பிச் செல்ல முடியாதுஇந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லைகடலுள் நுழையும்இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,கடலாக மாறுவதைப் பற்றியது

  • ஏரி ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு ஏரி சலனமற்றிருக்கிறது சில நாட்களுக்கு முன் தயக்கமின்றி உன்னிடமிருந்து காலியான மதுக்கோப்பைகளை விட்டெறிந்திருந்தாய் அதில் மறுக்காமல் பெற்றுக்கொண்டது ஏரி பிறகொரு நாள் நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக் கழுவிச் சாம்பலையும் கரைத்தாய் நேற்றுகூடக் கசந்துபோன நம் உறவினை இகழ்ந்து எச்சில் துப்பினாய் தண்ணீரில் எந்தக் காலமொன்றில்லாமல் எல்லாக் காலங்களிலும் உன் கழிவுகளைக் கொட்டி உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய் இன்று இதில் எதையும் நினைவுறுத்தாது உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய் உன் அசுத்தங்களை அடித்துக்…

  • வளைந்தோடும் நதியின் கரையில் நீராடும் பார்த்தனின் இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம். வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய் அது பாதத்தை தீண்டிடவும் நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான். ஒளி ஊடுருவும் மாளிகையின் அறையில் விழித்தான் வெளியே நாற்புறமும் மீன்களும் நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன பார்த்தனின் முன் எரிகுண்டம் ; நெய்யிட்டு தீ வளர்த்தான். அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது அருகிருந்த பாம்பின் கண்களில் படர்ந்திருந்த இச்சைத்தீ. கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம் பாம்பு பெண் பாம்புப்பெண் தீச்சடங்கு முடியவும் “இது சாட்சி”…

  • மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள் பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே!…

  • சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன. “The Pursuit of Happyness”…

  • வித விதமான கவலைகள் படைப்பூக்கமிழக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிய வண்ணம் சங்கிலியை அறுத்தெறிந்து ஓரிரு மகிழ்ச்சியை உளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு உவகை தலை தூக்குகையில் அதீத மகிழ்ச்சி அபாயம் தரும் என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் கவலைக்குள் ஆழ்ந்தேன் இனி அபாயமில்லை என்ற நிம்மதியுணர்வை அடையாளம் காணாமல் முழுநேரக் கவலையில் என்னை புதைத்துக் கொண்டேன்  +++++  என் கண்ணீர்த்துளிகளை மழைத் துளிகள் மறைத்து விடுதல் சவுகர்யம். நதி உற்பத்தியாகும் இடத்தை மலைகளும் குகைகளும் மறைத்திருக்குமாம்…

  • என் கவிதைக்கான கருப்பொருளாக நீரைத் தேர்ந்தெடுத்தேன். பீய்ச்சியடித்த ஊற்று, மணலில் சீறிப்பாய்ந்து பாறைகளைத்தள்ளி விரையும் காட்டாறு. அதி உச்சியின் மேலிருந்து கொட்டும் அருவி. சமவெளிகளில் நகரும் நதி. கிளைக்கும் கால்வாய்கள். புனித நகரங்களின் இரு மருங்கிலும் படரும் ஜீவ நதி. அணைகளால் தடுக்கப்பட்ட ஒட்டத்தை தன் மட்டத்தை உயர்த்தி மீட்டெடுத்து கடும் வேகத்தில் பயணமாகி, பரந்து விரிந்த கடலுடன் சங்கமமாகி தன் அடையாளமிழக்கும் ஆறு. குழாயிலிருந்து விடுபட்டு கழுவியில் நிறைந்து, குழிந்து, வெளிச்செல்லும்குழாயின் உள் புகும் நகராட்சி…