Tag: திசை
-
கையில் ஒளிந்த சீட்டு, இதயங்களை உடைக்கும் ஒளிர்வு, கூடுதல் நேரத்தில் அடித்த கால்பந்திலக்கு, வஞ்சகனின் வெள்ளி நாவு, துறவியின் காலைப் பிரார்த்தனை, நிறுவனத் தலைவனின் கரும் லட்சியம், தாயின் கடுமையான அன்பு – இவ்வனைத்திலும் இருப்பவன் நானே! சிறப்பு என்பது என் சாயல் – தங்கத்தில் எழுதப்பட்டாலும் நிழலில் செதுக்கப்பட்டாலும் கோயில்களில் என்னைத் தேடுகிறாயா? கூர்ந்து பார்— ஒவ்வொரு பிரகாசமான விஷயத்தின் பின்னிருக்கும் பிரகாசம் வெற்றியாளரின் நெஞ்சில் நிறையும் வெற்றி இவ்வுலகையே வளைக்கும் எஃகுத் தீர்மானம் –…
-
கான்டர் எனப்படும் திறந்த லாரியில் ஏறி வனத்துக்குள் சென்றோம். எங்களது லாரியில் பத்து-பன்னிரண்டு சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். மூன்றுமணி நேரம் தேடினோம். நீர்நிலைகளுக்கருகே காத்திருந்தோம். குரங்குகளும் மான்களும் இடும் எச்சரிக்கை ஒலிக்குப் பின்னர், ஒலி வந்த திசையில் காத்திருந்தோம். புலிகளின் பாதச்சுவடுகளைத் தேடினோம். ஈரப்பதமாக இருந்த இடத்தில் அதன் காலடித் தடங்களைப் பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் புலி அங்கு உலவிய தடம் அது என்றார், வாகனத்தைச் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர். அந்தத் தடம் பெண் புலியினுடையதாக…
-
செருப்படி சத்தம் காதைக் கிழித்தது பொறுக்கவியலாமல் சத்தம் நின்றதும் வாசல் வெளியே ஒரு ஜோடி செருப்பு பாதங்கள் எங்கேயென திசையெல்லாம் அலைகையில் செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம் திரும்பவும் அறையில் அடைந்தேன் செருப்படி சத்தம் மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்