Tag: தலை

  • —- சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த…

  • தலைகளில்லா முண்டங்கள் ஒரு படை அமைத்தன தலைவன் ஒருவனை நியமிக்க தலை தேடும் பணியில் இறங்கின கிடைக்காமல் போன தலைக்கு பதிலாய் தலையின் சித்திரம் வரைந்த பலகையொன்றை எடுத்து ஒரு முண்டத்தின் மேல் ஒட்டி வைத்தவுடன் அதன் உயரம் பன்மடங்காகி எடை பல்கிப் பெருகி அதன் காலடி நிழலின் சிறு பகுதிக்குள் மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.