Tag: ஜாவா
-
கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள்.…