Tag: சிலை

  • இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா…

  • தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப்…

  • மிருகக் காட்சி சாலையின் முகப்பில் கம்பீரமாக தசைகள் புடைக்க மிடுக்குடன் வீரமாக உறுமுவது போல நிற்கும் சிங்கத்தின் சிலை. கூண்டுக்குள் பிடறி எலும்பு தெரிய ரோமம் உதிர்ந்து பாவப் பட்ட பார்வையுடன் தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை நக்கிக் கொண்டிருக்கும் நிஜச் சிங்கம்.