Tag: சாலை
-
சாலையில் தனித்து அலைந்து திரியும்இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!தொழிற்கள் குறித்து கவலையின்றி,அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.சூரியனைப் போல சுதந்திரமாக,இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,சாதாரண எளிமையில்முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது எமிலி டிக்கின்ஸன்
-
இந்தியா எனக்கு என்ன? – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன்– தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான…
-
நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க…
-
தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு…. +++++ தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா? +++++ கல்லறையிலிருந்து எழுந்து வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும் இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும் நடுவழியில் சந்தித்துக் கொண்டன ஒன்றின் ஆவேசமும்…