Tag: சக்கரம்
-
வான் வெளியைப் போர்த்தி பூமியில் இரவாக்கி சிறு சிறு துளைகளில் வெண்தாரகைகள் வைத்து உயிர்களுக்கு நித்ரை தருகிறாள் பறவைகளைப் பள்ளியெழுச்சி பாடவைத்து இருள் போக்குகிறாள் மகாமாயையை ஏவி யோகமாயை நடத்தும் அளவிலா விளையாட்டு இரவும் பகலும் அனவரதமும் +++++ ஒருமுறை நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி கருவொன்றை மாற்றி தன்னைப் புகுத்திக் கொண்டு சிசுவாய் வெளிப்பட்டு காற்றாய் மறைந்து அசரீரியாகி…… +++++ இன்னொரு முறை சுபத்திரையாகத் தோன்றி ஒற்றைப் பார்வையில் அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி சன்னியாச வேடமிடத் தூண்டி…
-
“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி” சும்மா இருக்க முடியாததால்…