Tag: கோயில்

  • ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது  சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு”…

  • The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன்…

  • நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் :…

  • தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.