Tag: கூண்டு

  • இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்…

  • சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால…

  • மிருகக் காட்சி சாலையின் முகப்பில் கம்பீரமாக தசைகள் புடைக்க மிடுக்குடன் வீரமாக உறுமுவது போல நிற்கும் சிங்கத்தின் சிலை. கூண்டுக்குள் பிடறி எலும்பு தெரிய ரோமம் உதிர்ந்து பாவப் பட்ட பார்வையுடன் தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை நக்கிக் கொண்டிருக்கும் நிஜச் சிங்கம்.