Tag: குருவி

  • —- சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த…

  • சிற்றூரில் வாழ்ந்திருந்த சிறுவயதில் விடியற்காலம் வாசற்படியில் நான் படிக்கும் சத்தத்தோடு விதவிதமான பறவைகளின் சத்தங்களும் சேரும் சேவலின் கூவல் காகங்களின் கரைச்சல் குருவி, மைனாக்கள், மற்றும் பெயர் தெரியா பறவைகள் வரும் பகலுக்காக ஆயத்தமாகும் சத்தங்கள் இப்போதெல்லாம் விடியற்காலத்தை சந்திப்பதேயில்லை பறவைகளின் சத்தமும் கேட்பதேயில்லை வாசல் மட்டும் இருக்கிறது…. பக்கத்து ஃப்ளாட்டின் செருப்புகள் சிதறி