Tag: குயில்
-
மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள் பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே!…
-
தைரியத்துடன் செயல் படுங்கள். அரச குடும்பத்தின் செல்வம் இங்கிருந்து மீளாமல் இருக்கட்டும். சாதாரண பெண்கள் தத்தம் வர்க்கத்தில் பிறந்த காதலர்களையே ஈர்ப்பார்கள்; ஆனால் உயர்ந்தோர் தாழ்ந்தோர், எல்லா வர்க்கத்தோரையும் உணர்வால் வளைப்பவரே சிறந்த பெண்கள்” உதயனின் பேச்சைக் கேட்ட பெண்கள் உடன் இளவரசனைக் கவரும் வேலையில் இறங்கினர். ஏதோ பயம் கொண்டவர்கள் போல ஆனந்தம் தரும் சில சைகைகளை புருவங்களினால், பார்வைகளால், கொஞ்சும் வார்த்தைகளினால், புன்னகைகளால், அங்க அசைவுகளால் செய்தார்கள். அரச ஆணையின் விளைவால், இளவரசனின் மென்மைத்…