Tag: குதிரை

  • காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே…

  • வளைந்தோடும் நதியின் கரையில் நீராடும் பார்த்தனின் இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம். வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய் அது பாதத்தை தீண்டிடவும் நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான். ஒளி ஊடுருவும் மாளிகையின் அறையில் விழித்தான் வெளியே நாற்புறமும் மீன்களும் நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன பார்த்தனின் முன் எரிகுண்டம் ; நெய்யிட்டு தீ வளர்த்தான். அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது அருகிருந்த பாம்பின் கண்களில் படர்ந்திருந்த இச்சைத்தீ. கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம் பாம்பு பெண் பாம்புப்பெண் தீச்சடங்கு முடியவும் “இது சாட்சி”…