Tag: கிளை
-
கான்டர் எனப்படும் திறந்த லாரியில் ஏறி வனத்துக்குள் சென்றோம். எங்களது லாரியில் பத்து-பன்னிரண்டு சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். மூன்றுமணி நேரம் தேடினோம். நீர்நிலைகளுக்கருகே காத்திருந்தோம். குரங்குகளும் மான்களும் இடும் எச்சரிக்கை ஒலிக்குப் பின்னர், ஒலி வந்த திசையில் காத்திருந்தோம். புலிகளின் பாதச்சுவடுகளைத் தேடினோம். ஈரப்பதமாக இருந்த இடத்தில் அதன் காலடித் தடங்களைப் பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் புலி அங்கு உலவிய தடம் அது என்றார், வாகனத்தைச் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர். அந்தத் தடம் பெண் புலியினுடையதாக…
-
தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசி – திஸ்ஸாரக்கா – போதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக்…
-
தீனீ போட்டு கட்டுப்படியாகாமல் விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள் தெருக்களில் திரிந்தன வெள்ளைப் பசு முள்மரங்களை சுவாசம் பிடித்த படி நின்றது மஞ்சள் பசு சாலையோரங்களில் போடப்பட்ட கற்குவியற்களை நாவினால் தொடுகிறது. வெள்ளைப்பசுவின் இளங்கன்று பிளாஸ்டிக் குப்பைகளை ஆர்வத்துடன் நோக்குகிறது மாலை வீடு திரும்பாத பசுக்களைத் தேடி வந்த உரிமையாளன் மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான். இப்போதெலாம் பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை நவநாகரீக கோசாலையில் சுகமாய்க் காலங் கழிக்கின்றன காசு கொடுத்து பசுக்களுக்கு…
-
பட்டுப்போன மரமொன்று பரம சிவன் போல் தெரிந்தது உயரமான மரத்தின் இரு புறத்திலும் இரு கரங்களென பெருங்கிளைகள் மேல் நோக்கி வளைந்த இடப்புற கிளையின் இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும் திரிசூலக் கிளைகள் முன் நோக்கி வளைந்து கண்ணில் படா தண்டத்தின் பிரிவில் தொங்கும் கையென வலப்புறக் கிளை தண்டின் உச்சியில் உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும் கொத்தான கிளைகள் பறவைகள் காலி செய்துவிட்டுப் போன கூடுகள் சிரப்பாகத்திற்குக் கீழ் சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன் சிவனே என்று இருந்த…
-
கிளை நட்டு நீரூற்றி களை பிடுங்கி மருந்தடித்து பாட்டு பாடி பொறுமை காத்து…… வெகு நாளுக்குப் பிறகு பூத்த மலரை கையில் ஏந்தி பார்க்கையில் இரு இதழ்கள் அளவு குறைந்தும் ஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு விகாரமாக இருந்தது. எனினும் என் மலரை பெருமையுடன் சட்டையில் குத்திக்கொண்டேன்.