Tag: கிணறு
-
மண்டியிட்டு திட்டில் தலை வைத்து பார்க்கையில் ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம் ஈரமிலா தொண்டையில் சொற்களின் உற்பத்தி முடக்கம். வறண்ட கோடைக்கு நடுவே பெய்த சிறு தூறலின் ஒற்றைத் துளி நாக்கை நனைத்தவுடன் பெருகிய வெள்ளத்தில் கிணறு பொங்கி வழிந்தது.
-
அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும். பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம். கிணற்றோரக்…
-
கருணையுள்ளம் பருத்தியாகி திருப்திகுணம் நூலாகி தன்னடக்கம் முடிச்சாகி வாய்மை முறுக்காகி அமைந்த பூணுலொன்று உங்களிடம் இருந்தால் அதை எனக்கு அணிவியுங்கள் அது அறுந்து போகாது ; அது அழுக்காகாது ; எரிந்து போகாது ; தொலைந்தும் போகாது ; நானக் சொல்கிறான் அத்தகைய பூணூலை அணிந்தோரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் -குரு நானக் ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம்…
-
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன். திணைப்பெயர்ச்சி டோல்கேட்..ஃப்ளை ஓவர்… ஃபோர் லான்..சர்வீஸ் ரோட்… மோட்டல்… பெட்ரோல் பங்க்… என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டே வருகிறாள் ஹேமா நெல்லு வயல்… வாழத்தோப்பு… கம்மாயி…வெத்தலை கொடிக்கால்… செவ்வந்தித் தோட்டம், கமலைக்கிணறு… என்று சிறு வயதில் என் விரல்…