Tag: கால்வாய்

  • ஹரி பார்த்திக்கு சொன்னது : “இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர் போனில் தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டேன். நேர்முகத்துக்குப் பிறகு பணியமர்த்தப்படும் தகுதி சுசிதாவுக்கில்லை என்று நாம்இருவருமே பரிந்துரைத்தோம். ஆனால் நேர்முகமே கண்  துடைப்பு…

  • என் கவிதைக்கான கருப்பொருளாக நீரைத் தேர்ந்தெடுத்தேன். பீய்ச்சியடித்த ஊற்று, மணலில் சீறிப்பாய்ந்து பாறைகளைத்தள்ளி விரையும் காட்டாறு. அதி உச்சியின் மேலிருந்து கொட்டும் அருவி. சமவெளிகளில் நகரும் நதி. கிளைக்கும் கால்வாய்கள். புனித நகரங்களின் இரு மருங்கிலும் படரும் ஜீவ நதி. அணைகளால் தடுக்கப்பட்ட ஒட்டத்தை தன் மட்டத்தை உயர்த்தி மீட்டெடுத்து கடும் வேகத்தில் பயணமாகி, பரந்து விரிந்த கடலுடன் சங்கமமாகி தன் அடையாளமிழக்கும் ஆறு. குழாயிலிருந்து விடுபட்டு கழுவியில் நிறைந்து, குழிந்து, வெளிச்செல்லும்குழாயின் உள் புகும் நகராட்சி…