Tag: காற்று
-
Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது. – குருதி “ஓர் அசல்…
-
நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க…
-
தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு…. +++++ தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா? +++++ கல்லறையிலிருந்து எழுந்து வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும் இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும் நடுவழியில் சந்தித்துக் கொண்டன ஒன்றின் ஆவேசமும்…
-
வான் வெளியைப் போர்த்தி பூமியில் இரவாக்கி சிறு சிறு துளைகளில் வெண்தாரகைகள் வைத்து உயிர்களுக்கு நித்ரை தருகிறாள் பறவைகளைப் பள்ளியெழுச்சி பாடவைத்து இருள் போக்குகிறாள் மகாமாயையை ஏவி யோகமாயை நடத்தும் அளவிலா விளையாட்டு இரவும் பகலும் அனவரதமும் +++++ ஒருமுறை நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி கருவொன்றை மாற்றி தன்னைப் புகுத்திக் கொண்டு சிசுவாய் வெளிப்பட்டு காற்றாய் மறைந்து அசரீரியாகி…… +++++ இன்னொரு முறை சுபத்திரையாகத் தோன்றி ஒற்றைப் பார்வையில் அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி சன்னியாச வேடமிடத் தூண்டி…
-
றியாஸ் குரானா தெரு இங்கிருந்து தொடங்குகிறது தெரு. இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம். அந்த தெருவின் முடிவடைகிற இடம். ஒன்று போல் தென்பட்டாலும், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களாலும், அடையாளங்களாலும் நீண்டு கொண்டே இருக்கிறது. எனது தெருவாகத் தொடங்கி உனது தெருவாக முடிவடைவதுகூட ஒரு வசதிக்காகத்தான். யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்? அதைக் கண்டு பிடிக்கும் போது அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்தத் தெரு என ஒரு குழந்தை கேட்கும் போது,…
-
(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்) இடம் காலம் என்ற இரட்டை தொடர்ச்சிகள் பிரக்ஞை என்றொரு மறைபொருளின் நூல் பொம்மைகள் நரைத்த மீசை இரைந்த முடி கொண்ட இயற்பியல் மேதை உணர்ந்து சொன்னான். +++++ சுவரில் சாய்ந்து அமர்ந்த படி உறங்கியபோது அண்ட வெளியில்…