Tag: கவிதை
-
ருபையாத் அல்லது ருபாயியாத் உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவி ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி – இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்பது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது. சீர்மை பதிப்பகம் “ரூமியின் ருபாயியாத்” தமிழாக்க நூலை சமீபத்தில்…
-
கொட்டும் பனிப்பொழிவில் புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்அவனாகத்தான் இருக்க வேண்டும்அவன் எப்படி இங்கே?அவன் மாதிரிதான் தெரிகிறதுஅங்கே இரவுஅவன் கனவில் பனி பொழிகிறதுபுள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்திஅவள் எப்படி அங்கே?அவள் மாதிரிதான் தெரிகிறதுவிதிர்த்து எழுந்திருக்கிறான்ஆடைவிலகிய தொடையிலிருந்துதனது காலை மெல்ல எடுக்கிறான்சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்அவனுடைய கனவு முடிந்துவிட்டதுஅவளது பகல் முடியபல மணி நேரம் இருக்கிறது அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்அவன் மாதிரி இருந்த அவன்அவனாக இருந்திருந்தால்தாண்டிச் சென்றிருக்கமாட்டான்அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்கண்களுக்குள் பொழிகிறது பனிஎதுவும் நடக்காததைப் போல அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்அவள் மாதிரி இருந்த…
-
புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை. ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை…
-
கவிதை புத்தகங்களை அதிகம் சேர்ப்பதில்லை. அடிக்கடி படிக்க வைக்கும் அம்சம் இல்லையெனி்ல் எழுதியவை எளிதில் அழுகிப்போகும் உணவாகி விடும். கதைகள் போலில்லாமல் கவிதைகள் அதிர்வைத் தரவில்லையெனில் புத்தக ஷெல்பின் அடித்தட்டில் சென்றுறங்க வேண்டியதுதான். நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான Sri N Srivatsa அவர்கள் தாம் மொழிபெயர்த்த “முகமுகமாய்ப் பூத்த மரங்கள்” நூலைத் தந்தபோது மறுக்க முடியவில்லை. தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் வேறு தலைப்பு வைத்திருக்கலாம் என்று நண்பரிடம் சொன்னேன். கவிதைகளை நேற்றிரவு வாசிக்க ஆரம்பித்த போது என்னுடைய…
-
இந்தியா எனக்கு என்ன? – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன்– தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான…
-
சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை…
-
முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார். பழைய வருடத்தை எரித்தல் வினாடிகளில் கடிதங்கள் தம்மைத்தாமே விழுங்கிக் கொண்டன ஒளிபுகும் காகிதங்களில் எழுதி தாழ்ப்பாளில் நண்பர்கள் தொங்கவிட்ட குறிப்புகள் விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தத்துடன் வதங்கி காற்றுடன் மணம் புரிந்து கொண்டன – வருடத்தின் பெரும் பகுதிகள் எளிதில் எரியக் கூடியவை – காய்கறிகளின் பட்டியல், பாதிக் கவிதைகள், ஆரஞ்சு நிறத்தில் சுழலும்…
-
நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன். மாயை எந்த மனநிலையிலிருப்பினும் ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது, இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும் ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது, எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும் வெகு உயரே…
-
“சொற்ஜாலங்கள் கவிதை இல்லை கடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை புதிர்கள் கவிதை இல்லை பிரகடனங்கள் கவிதை இல்லை முழக்கங்கள் கவிதை இல்லை பிரச்சாரங்கள் கவிதை இல்லை வசனங்கள் கவிதை இல்லை” எழுதிய எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு விட்டு வெண் தாளொன்றை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு ”எது கவிதை இல்லை என்பது புரிந்தது; ஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா?” என்று கேட்ட போது மௌனமே பதிலாய்க் கிடைத்தது. வெண் தாளில் ஒரு கறுப்பு புள்ளி மட்டும்…